“பூட்டிய விலங்கினை உடைப்பேன்” -ஆவேசம் கொண்டார் பிள்ளையான்- - Yarl Thinakkural

“பூட்டிய விலங்கினை உடைப்பேன்” -ஆவேசம் கொண்டார் பிள்ளையான்-

எனக்கு போடப்பட்டுள்ள விலங்கை உடைத்து விரைவில் வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்த்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உறுதி பூண்டுள்ளார். 

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும் அவர் சிறையில் இருந்து கொண்டே நடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று நடந்த போது அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியனை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன் வழங்கியிருந்தார். 

விசாரணை முடிந்த பின்னர் அவர் சிறைச்சாலைக்கு செல்லும் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான்; விரைவில் விலங்கினை உடைத்துவெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்து சென்றார். 

Post a Comment

Previous Post Next Post