விக்டோரியா கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! -தொல்புரத்தில் சோகம்- - Yarl Thinakkural

விக்டோரியா கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! -தொல்புரத்தில் சோகம்-

யாழ்.தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம் விமலவர்ணா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்பவத் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சையில் தோற்றுவதற்காக குறித்த மாணவி கற்றல் நடிவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். 

பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே அவர் தனது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து;ளார். 

இந்நிலையில் பரீட்சை விண்ணப்பதாளில் கையொப்பம் இடுவதற்கு வருமாறு பாடசாலையின் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் தந்தைக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தார்.

நேற்று மதியம் வீட்டிற்கு வந்த தந்தை கதவினைத் திறக்கும் படி மகளை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக மகள் கதவினை திறக்கவில்லை.

அதனால் அவர் மதில் மேல் ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை சடலம் உறவினர்களிடம் கையளிக்கட்டது.\

Post a Comment

Previous Post Next Post