“மணியுடன் பேசுவோம்” நிகழ்வு சனத்திரளுடன் ஆரம்பம்!! - Yarl Thinakkural

“மணியுடன் பேசுவோம்” நிகழ்வு சனத்திரளுடன் ஆரம்பம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரம், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொள்ளும் “மணியுடன் பேசுவோம்” என்ற நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுறும் நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலன கட்சி வேட்பாளர்கள் நேரலை மற்றும் நேரடி விவாதம் போன்றவற்றில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதன்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிவரும் மாற்றத்திற்கான இளைஞர் அணி “மணியுடன் பேசுவோம்” என்ற ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு இன்று 4 மணிக்கு இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வரதி மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மணிவண்ணன் தனது நிலைப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துவார் என்றும், அவருடைய நிலைப்பாடுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் குறித்த நிகழ்வில் வைத்து நேரடியாக அவரிடம் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி தற்போது நடைபெற்றுவரும் அந்த நிகழ்வில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post