நெடுந்தீவு பெண் மன்னாரில் கொலை!! -தாய்மாமன் கைது: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்- - Yarl Thinakkural

நெடுந்தீவு பெண் மன்னாரில் கொலை!! -தாய்மாமன் கைது: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்-

மன்னார் உப்பளம் பகுதியில் வைத்து நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்று திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர்களால் மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்டார். அன்று இரவு வேளையில் குறித்த யுவதி மன்னார் சௌத்பார் பகுதியால் பயணித்துள்ளார். 

கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி, அவரது பெரிய தாயின் மகனின் மனைவி மற்றும் தாய் மாமன் ஆகியோர் மன்னார் சௌத்பார் புகையிரத வீதியில் பயணத்துள்ளனர். 

இரு தரப்பினர்களும் வெவ்வேறு பகுதியில் இருந்த நிலையில் குறித்த யுவதியின் சடலம் உப்பளம் பகுதியில் உள்ள பாத்தியில் இருந்து மறுநாள் மீட்கப்பட்டிருந்தது, 
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

இந்நிலையில் பாடுகொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரி மற்றும் பெரிய தாயின் மகளின் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான குறித்த யுவதியின் தாய் மாமனார் தலைமறைவாகி இருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பிரதான சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

விசாரனைகளின் பின்னர் குறித்த பிரதான சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post