பண்டார வன்னியனின் வெற்றி தினம்!! -இன்று யாழில் அனுஸ்ரிப்பு- - Yarl Thinakkural

பண்டார வன்னியனின் வெற்றி தினம்!! -இன்று யாழில் அனுஸ்ரிப்பு-

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம்மன்னனின் உருவச்சிலையடியிலேயே மேற்படி நிகழ்வு நடந்தது. 

தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் ஆரம்பமாகியது. 

அங்குள்ள உருவச்சிலைக்கு முன்பாக அம்மன்னனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கும் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

Previous Post Next Post