இரவோடு இரவாக நடக்கும் விதிமுறை மீறல்!! -யாழ் வீதிகளில் நடக்கும் அநியாயம்- - Yarl Thinakkural

இரவோடு இரவாக நடக்கும் விதிமுறை மீறல்!! -யாழ் வீதிகளில் நடக்கும் அநியாயம்-

யாழ்.மாவட்டத்தில் உள்ள வீதிகள் அனைத்தும் இன்று இரவு தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான கட்சி வேட்பாளர்களின் பிரச்சார துண்டுப்பிரசுரங்களால் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. 

9 ஆவது பாராளுமன்ற பொது தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று வாக்களிப்பு நிலையங்களை தயார் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களுக்கு மிக அருகில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதுடன், வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று இரவு ஹயஸ் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள், வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வீதிகளில் வலம் வந்த கட்சி ஆதரவாளகர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை கொண்ட துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டன. 

இதனால் பெரும்பாலான வீதிகள் முழுவதிலும் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள், குவிந்து இருந்தை காணக்கூடியதாக இருந்தது. 

Post a Comment

Previous Post Next Post