இரு கட்சியினருக்கு இடையில் மோதல்!! -ஊர்காவற்றுறையில் இன்றிரவு சம்பவம்- - Yarl Thinakkural

இரு கட்சியினருக்கு இடையில் மோதல்!! -ஊர்காவற்றுறையில் இன்றிரவு சம்பவம்-

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இரு வேறு கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் கைகலப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களை வீசும் நடவடிக்கைகளில் குறித்த இரு கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட போட்டித்தன்மையே இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஊர்காவற்றுறை புளியங்கூடல் வாக்களிப்பு நிலைமான நெசவு நிலையத்திற்க அருகில் தமது கட்சி வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் பொறிக்கப்பட்ட சிறிய துண்டுப்பிரசுரங்களை வீதிகளில் வீசிச் செல்லும் நடவடிக்கைளில் இரு கட்சியின் ஆதரவாளர்களும் நேற்று ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் ஒரு தரப்பினர்  நெசவு நிலையத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி செல்லும் வீதிகளில் குறித்த துண்டுப்பிரசுரங்களை வீசியவாறு மோட்டார் சைக்கில்களில் வந்துள்ளனர். 

மற்றைய கட்சியினர் அதே வீதியில் ஊர்காவற்றுiயில் இருந்து  நெசவு நிலையம் நோக்கி துண்டுப்பிரசுரங்களை வீசி வந்துள்ளனர். 

இதன் போது இரு தரப்பினர்களும் நேருக்கு நேர் சந்தித்த போது முறகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறகல் நிலையை அடுத்து இரு தரப்பினர்களும் மோதிக் கொண்டுள்ளனர். 

இருப்பினும் தாங்கள் செய்த செயல் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்பதால் சிறிது நேரத்திலேயே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post