இளைஞரை கடத்தி வாள்வெட்டு தாக்குதல்!! -வரணியில் பயங்கரம்- - Yarl Thinakkural

இளைஞரை கடத்தி வாள்வெட்டு தாக்குதல்!! -வரணியில் பயங்கரம்-

யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கும்பல் ஒன்று அவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

இன்று செவ்வாய்கிழமை மாலை சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

குறித்த இளைஞர் வேலைக்குச் சென்று விட்டு வழமை போன்று வீடு நோக்கி பேருந்தில் புறப்பட்டுள்ளார். வுழமையாக அவர் பேருந்தை விட்டு இறங்கும் சுட்டிபுரத்தடியில் அவர் இறங்கியுள்ளார். 

இதன் போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென குறித்த இளைஞரை பிடித்து கடத்திச் சென்றுள்ளனர். 

வேறு ஒரு இடத்தில் வைத்து அந்த இளைஞர் மீது குறித்த கும்பல் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post