செஞ்சோலை நினைவேந்தலுக்கு தடை!! -கைதாவீர்கள் என்றும் பொலிஸ் எச்சரிக்கை- - Yarl Thinakkural

செஞ்சோலை நினைவேந்தலுக்கு தடை!! -கைதாவீர்கள் என்றும் பொலிஸ் எச்சரிக்கை-

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நடத்துவதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் தடைவிதித்துள்ளனர். 

இவ் நினைவேந்தலின் 14 ஆம் ஆண்டு நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

இப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபடும் நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டுகப்பட்டிருந்தன. 

இந்நிலையில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களை நேற்று பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும் அவ்வாறு நடாத்தினால் கைது செய்ய படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post