யாழில் தேர்தல் பணிகள் ஆரம்பம்!! -வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு- - Yarl Thinakkural

யாழில் தேர்தல் பணிகள் ஆரம்பம்!! -வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு-

நாளை 5 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை 9.15 மணி முதல் அனுப்பிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன. இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 5 இலட்சத்து 71 ஆயிரம் 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post