பெற்றோர் பயன்படுத்திய அழகுசாதன கிரீம் வகை பொருள் ஒன்றை உட்கொண்ட சிறு குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தனது தாய் தந்தையர் கை மற்றும் கால்களுக்கு பூசும் சிரீம் ஒன்றினை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த குழந்தையை பெற்றோர் அவதானிக்காமல் விட்ட நிலையில், அந்த கீரிமினை குழந்தை உட்கொண்டுள்ளது.
மயக்கமடைந்த நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தங்காலை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment