மணிக்கு ஆதரவா? கட்சி உறுப்பினர்களை களை எடுக்கும் முன்னணி!! - Yarl Thinakkural

மணிக்கு ஆதரவா? கட்சி உறுப்பினர்களை களை எடுக்கும் முன்னணி!!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒதுக்கப்படும் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமறு கட்சியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்சிக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்த ஆசனங்களின் ஊடாக உறுப்பினராக தெரிவானவகி மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையே இவ்வாறு பதவியில் இருந்து விலகுமாறு கட்சி ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்பாடத விகிதாசார அடிப்படையில் கிடைத்த ஆசனங்களின் ஊடாக உறுப்பினர்களுக்கு இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை.

குறிப்பாக யாழ்.மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு விகிதாரசத்தில் 4 ஆசனங்கள் கிடைத்திருந்தன. இதில் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.மணிவண்ணன் உட்பட 3 பேர் நியமிக்கப்பட்டனர்.

மணிவண்ணனின் உறுப்புரிமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் சய்யப்பட்டதை அடுத்து அவர் உறுப்பினக செயற்படவில்லை.

ஏனைய 3 ஆசனங்களுக்கும் சுழல்ச்சி முறையில் இரு பெண்கள் உட்பட  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவர்.
இதில் மணிவண்ணனுக்கு ஆதரவா செயற்பட்ட இரு உறுப்பினர்களையே விலகுமாறு கடந்த புதன்கிழமை கட்சியால் கட்டாய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுன்னாகம் பிரதேச சபையிலும் அவருக்கு ஆதரவா செயற்பட்ட ஒரு உறுப்பினரை விலகுமாறு கோரப்பட்டுள்ளது.
இதே போன்று சாவகச்சேரி பிரதேச சபையிலும் 3 உறுப்பினர்களை விலககுமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த சபைகளில் விகிதாசார அடிப்படையில் கிடைத்த ஆசனங்களின் ஊடாக உறுப்பினரான மணிவண்ணனுக்கு ஆதரவளிக்காத எவரையும் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியால் இதுவரை கோரப்படவில்லை.

இந்நிலையில் மணிவண்ணனை கட்சியில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாக அவருக்கு ஆதரவாக செயற்படும் உறுப்பினர்களையும் விட்டுவைக்காது கட்சி சில நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

இதில் ஒரு அங்கமாகவே மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்தும் கட்சியின் செயலாளரும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனை தொடர்பு கொள்ள முயட்சித்த போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Post a Comment

Previous Post Next Post