களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த 80 வயது மூதாட்டி தப்பி ஓடியதால் நாட்டில் மீண்டும் கொரோனா தொடர்பான சிக்கல் ஏழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து 27 ஆம் திகதி நாட்டிற்கு குறித்த மூதாட்டி தனிமை நடவடிக்கைகளுக்காக பேருவலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும், மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மூதாட்டி நேற்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பி, களுத்தறையிலிருந்து பேருந்தில் கேகாலைக்கு வந்தடைந்தார்.
இதையடுத்து குறித்த மூதாட்டி பற்றிய தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காவலில் எடுத்து பின்னர் அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த மூதாட்டியின் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை வரும் வரை அவருடன் தொடர்பிலிருந்த 7 ஊழியர்களை சுய தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment