பாராளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் அமைச்சு பதவி பெற்றுக்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வேவ்வேறு தந்திரோபாயங்கள் மூலம் அமைச்சர் பதவிகளைப் பெற ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகளுக்கு வேலை செய்வதற்கு அமைச்சர் பதவி கட்டாயம் தேவையா என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
சலுகை பெற்றும் நோக்கில் அரசியலில் நுழையும் அரசி யலில் வாதிகளால் நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டு என்றும், சலுகை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இல்லா மல் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க உள்ளவர்களே தனக்குத் தேவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment