மயக்க நிலையில் இருந்து மீண்ட எஸ்.பி.பி - Yarl Thinakkural

மயக்க நிலையில் இருந்து மீண்ட எஸ்.பி.பி

கொரோனா தொற்றால் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என வைத்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.
இருப்பினும் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மயக்கநிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், வைத்திய குழுவினர் கண்காணித்து வருவதாகவும் வைத்திய சாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. தற்போது மயக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post