தேர்தலில் தோல்வியடைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அம்பாறையிலே இந்தத் தடைவ ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைக்காமல் போயிருக்கிறது. மட்டக்களப்பிலே நாங்கள் இரண்டு ஆசனங்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறோம். வன்னிலே 3 ஆசனங்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விட மோசமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 3 ஆசனங்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறோம்.
எங்களுக்கு வெளியே இருக்கிற ஆசனங்கள் அதைவிடக் கூடுதலானதாக நான்கு ஆசனங்கள் உள்ளது. ஆகவே இந்தப் பின்னடைவு சம்மந்தமாக நாங்கள் உடனடியான சில கருத்தப் பரிமாறல்களை கட்சிக்குள்ளே நடத்துவோம்.
அதிலே முக்கியமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழரசுடைய தலைவர் தோற்றிருக்கிறார். பொதுச் செயலாளர் மட்டங்களப்பிலே தோற்றிருக்கிறார்.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கிற பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தலைமை தோற்றதாகக் கருதலாம். அவர்கள் ஒரு சில வாக்குகளாலே தோற்கவில்லை.
அவர்கள் தீர்மானமாக தோற்றிருக்கிறார்கள். ஆகவே அதைக் குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
Post a Comment