கட்சித் தலைவரான எனக்குத் தெரியாமல்தான் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு கொடுப்பதாக இரகசிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் என்னுடன் கட்சியின் செயலாளர் எதுவுமே பேசவில்லை.
அவர் தன்னிச்சையாகவே முடிவெடுத்துள்ளார். இது குறித்து நான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசினேன்.
கட்சி தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இக்கட்டான நிலையில் உள்ளதால் தேசியப் பட்டியல் நியமனத்தில் என்னை நாடாளுமன்றம் செல்லுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்னிடம் கோரினர். இதனை நான் சம்பந்தனிடமும் துரைராஅசின்கத்திடமும் தெரியப்படுத்தியிருந்தேன்.
சம்பந்தனும் துரைராஜசின்கத்திடம் கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக என்னிடம் கூறியிருந்தார். ஆயினும் பின்னர் கட்சித் தலைவரான எனக்கு தெரியாமல் அந்த இடத்துக்கு கலையரசனை நியமித்துள்ளனர்.
இது எந்தவகையிலு ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று. உடனடியாக இந்த நியமனம் மீளப்பெறப்படவேண்டும் என கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கத்திடம் தெரிவித்துள்ளேன் என்றார்.
Post a Comment