தும்பளையில் எரிக்கப்பட்ட வாடிகள்!! -வெளிமாவட்ட – உள்ளுர் மீனவர்களிடையே முறுகல்- - Yarl Thinakkural

தும்பளையில் எரிக்கப்பட்ட வாடிகள்!! -வெளிமாவட்ட – உள்ளுர் மீனவர்களிடையே முறுகல்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - தும்பளை பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் 5 வாடிகள் இனந்தெரியாத நபர்களினால் இன்று வியாழக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெளி மாவட்ட மீனவர்களின் வாடித் தொகுதிக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனால் 5 வாடிகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post