யாழில் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!! -இராணுவத்தின் நடவடிக்கையால் அச்சம்- - Yarl Thinakkural

யாழில் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!! -இராணுவத்தின் நடவடிக்கையால் அச்சம்-

யாழ்.கீரிமலை பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டிற்குச் சென்ற நேரடியாக இராணுவத்தினர் அவருடைய விபரங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

கீரிமலை பகுதியின் 225, 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியில் இராணுவத்தினர் இன்று திடீர் சுற்றிவளைப்பினை நடத்தியிருந்தனர். 

இதன் போது வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.

மேலும் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post