மணிக்கு ஆதாரவாக யாழில் பதாகைகள்!! -கட்சி தலைமை மீது கடும் சீற்றம்- - Yarl Thinakkural

மணிக்கு ஆதாரவாக யாழில் பதாகைகள்!! -கட்சி தலைமை மீது கடும் சீற்றம்-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனின் பதவி பறிக்கப்பட்டு அவருக்க எதிராக முன்னெடுக்கப்படும் கட்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. 

பருத்தித்துறைப் பகுதியில் இன்று கட்டப்பட்டுள்ள இப் பதாகைகளுக்கு மணிவண்ணனின் பருத்தித்துறை ஆதரவாளர்கள் என்று உரிமை கோரப்பட்டுள்ளது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையின் இந்த நடிவடிக்கையினை கண்டிக்கும் வகையில் கறுப்பு நிறத்திலான பதாகைகளே அங்கு கட்டப்பட்டுள்ளன. 

அந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தமிழ் தேசியத்தின் வழியில் கடந்த 10 வருடங்களுக்க மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் உறுதியாவும், பல இன்னல்களுக்க மத்தியில் மக்களுக்கான குரல் கொடுத்து தலைமை காட்டிய பாதையில் வழிநடந்து நேர்மையாக குரல் கொழுத்து செயற்பட்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனுக்கு எதிராக பெய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பெய் குற்றச்சாட்டுகளை வைத்து அவருடைய பதவியைப் பறித்து துரோகம் இழைத்த தமிழ் Nதுசிய மக்கள் முன்னணிக் கட்சிக்கும், அதன் தலைமைகளுக்கும் பருத்தித்துறை மக்கள் சார்பாக எங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றோம். 

தீர்மானத்தை மாற்றியமைத்து தனிப்பட்ட பழிவாங்கல்களைத் தவிர்த்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதையும் தாழ்மைகாய கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post