யாழில் மனித எச்சங்கள் மீட்பு!! -இராணுவ நிலை கொண்டிருந்த பகுதியாம்- - Yarl Thinakkural

யாழில் மனித எச்சங்கள் மீட்பு!! -இராணுவ நிலை கொண்டிருந்த பகுதியாம்-

யாழ்.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது. 

குறித்த காணியில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போதே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அந்தப் பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post