இளைஞரின் கால் துண்டானது!! -சங்கத்தானை ரயில் விபத்தில் பரிதாபம்- - Yarl Thinakkural

இளைஞரின் கால் துண்டானது!! -சங்கத்தானை ரயில் விபத்தில் பரிதாபம்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை ஜயா கடைச் சந்திப்கு அருகில் இன்று காலை  நடந்த ரயில் விபத்தில் இளைஞர் ஒருவருடை கால் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த ரயிலுடன் சங்கத்தானை பகுதியில் தொலைபேசியில் உரையாடியபடி, தண்டவாளத்தில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் அவர் ரயிலுடன் மோதுண்டு கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த நபர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்றபோதும், அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. இதனால் அவரது காலொன்று துண்டிக்கப்பட்டது.

தென்பகுதியை சேர்ந்த நபரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார். உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post