கூரிய ஆயுதத்தால் வெட்டி இளைஞர் கொலை!! -சந்தேகநபர் தலைமறைவு- - Yarl Thinakkural

கூரிய ஆயுதத்தால் வெட்டி இளைஞர் கொலை!! -சந்தேகநபர் தலைமறைவு-


மதவாச்சி - வீராமுரிப்புவ, மதவாச்சி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படிச் சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கும் அவரின் சகோதரியின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post