தேசிய பட்டியல் யாருக்கு? வெடிக்கும் பூகம்பம்!! -மாவைகே என்கிறது யாழ் கிளை- - Yarl Thinakkural

தேசிய பட்டியல் யாருக்கு? வெடிக்கும் பூகம்பம்!! -மாவைகே என்கிறது யாழ் கிளை-

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பெறும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 

குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கலையரசனுக்கு வழங்குவதாக இன்று காலை தமிழரசு கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று அக் கட்சியின் யாழ் மாவட்ட கிளை உறுப்பினர்கள் மாட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர அவசரமாக கூட்டப்பட்டது. 

இக் கூட்டத்தில் தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசு கட்சியின் தெலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசிய பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள் பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post