திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு- - Yarl Thinakkural

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு-

நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் அனைத்துப் பாடசாலைகளும் முழுமையாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியை பேண முடியுமானால் அனைத்து மாணவர்களையும் அழைக்க முடியும்.

200ற்கும் அதிக மாணவர்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் கட்டம் கட்டமாக மாணவர்களை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 200ற்கும் அதிக மாணவர்களைக் கொண்டு பாடசாலைகளில்,

திங்கட்கிழமை :- 1, 2 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை :- 2 , 5 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை :- 3 , 5 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை :- 4 , 5 ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய வகுப்புக்கள்,

திங்கட்கிழமை :- 6 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை :- 7 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை :- 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை :- 9 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 6 , 7 , 8 , 9 ஆம் தர வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 இற்கு நிறைவடையும்.

10 , 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அனைத்து ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post