முருகன் சிலையை திருடிய பொலிஸ்!! -விற்பனை செய்யும் போது அதிரடி கைது- - Yarl Thinakkural

முருகன் சிலையை திருடிய பொலிஸ்!! -விற்பனை செய்யும் போது அதிரடி கைது-

முருகன் சிலையை திருடி பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்ய முயட்சித்த பொலிஸார் உத்தியோகஸ்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று திங்கட்கிழமை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்னிலான முருகன் சிலையை கடத்தி வந்து விற்க முயன்றபோது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட திருகோணமலை முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும். புதையலில் இருந்து கிடைத்த சிலை எனவும் அதனை ஒரு நண்பர் தந்தாகவும் இதனை விற்பதற்காக மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post