நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்த வாக்கு பெட்டி!! - Yarl Thinakkural

நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்த வாக்கு பெட்டி!!

நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி ஊடாக பாதுகாப்பான முறையில் வாக்குப்பெட்டி வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டது. 

நேற்று மாலை 5.45 மணியளவில் நெடுந்தீவில் இருந்து வாக்கு பெட்டிகளையும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரை ஏற்றிய உலங்கு வானூர்தி அங்கிருந்து யாழ்.கோட்டை பகுதியில் வந்து தரையிறங்கியிருந்தது. 

அங்கிருந்து உரிய பாதுகாப்புடன் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டது. 

Post a Comment

Previous Post Next Post