தமிழ் சினிமாவின் பாடும் நிலா என அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளே அவரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் இவரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் தெரிவித்தனர்.
இருந்த போதும் தற்போதைய சூழ்நிலையில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதே மேலானது என வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வார காலமாக சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தற்போது உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment