இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு தற்போது திருகோணமலையில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூடியுள்ளது.
தேசியப் பட்டியல் விவகாரத்தில் நடந்த குழப்பங்கள், கட்சி தலைமையை மாற்ற முனைந்தமை, தேர்தலில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு போன்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு இன்று கூடுவதால் அங்கு என்ன நடைபெறும் என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் செயற்குழுவில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், கி.துரைராசசிங்கம், எக்ஸ்.குலநாயகம், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி சார்பில் சி.சிறிதரன், வவனியா சார்பில் எஸ்.சத்தியலிங்கம், செ.செல்வராசா, த.கலையசரன் ஆகியோர் அரசியல் செயற்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
இதுவரை கொழும்பு கிளை சார்பில் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், இம்முறை கொழும்பு கிளை சார்பில் கே.வி.தவராசாவை கலந்து கொள்ளுமாறு, தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment