தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே இக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மணிவண்ணனுக்கு இத்தீர்மானம் தொடர்பில் இன்று காலைவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Post a Comment