யாழில் ஒருவருக்கு கொரோனா!! -பரிசோதனையில் தொற்று உறுதி- - Yarl Thinakkural

யாழில் ஒருவருக்கு கொரோனா!! -பரிசோதனையில் தொற்று உறுதி-

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பிரிசோதனையில் ஒருவருக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

வுpடத்தல்பளையில் உள்ள தனிமைப்படுத்தலில் உள்ள ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இன்று 100பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர், தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை 9 பேர், பொது வைத்தியசாலை மன்னார் 4 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 30 பேர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை 5 பேர், பிரதேச வைத்தியசாலை கோப்பாய் 5 பேர், பூநகரி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 20பேர், யாழ்.மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 24 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஒருவர் உள்ளிட்ட 100 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் விடத்தல்பளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள ஒருவருக்கு கொNhனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுளளது என்றார். 

Post a Comment

Previous Post Next Post