யாழ்.போதனா வைத்திய சாலையில் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான ரஜுவ்காந்த் நந்தினி தேவி (வயது 45) என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.
பெண்ணின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய போது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன விரக்தியில் குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தி மூடியதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மாலை 5.30 மணி அளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பிறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment