ஆணும் பெண்ணும் திடீர் கைது!! -புதுக்குடியிருப்பில் களமிறங்கிய கொழும்பு சி.ஜ.டி- - Yarl Thinakkural

ஆணும் பெண்ணும் திடீர் கைது!! -புதுக்குடியிருப்பில் களமிறங்கிய கொழும்பு சி.ஜ.டி-

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆண் ஒருவரும் இரணைப்பாலையைச் சேரந்த பெண் ஒருவரும் கொழும்பிலிருந்து வந்த விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாகவே கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புத்தக சாலை ஒன்றை நடத்திவருகின்ற நபரும் இரணைப்பாலையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஆணுக்கு 35 இலட்சம் ரூபாய் பணமும் அந்தப் பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் பணமும் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. 

குறித்த பணம் வெளிநாடுகளில் உள்ளவர்களால் முறைகேடான முறையில் வங்கிகளில் எடுக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டிருப்பதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரச தரப்புக்கு அறிவித்துள்ளனர். 
இதனாலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post