யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு வீடு இல்லாத குடும்பம் ஒன்றக்கு இராணுவத்தால் வீடு நிர்மானித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த வீடு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் இன்றைய தினம் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புங்குடுதீவு 4ம் வட்டாரம் ஜே 27 கிராம சேவகர் பிரிவில் சிறிய குடிசை வீடு ஒன்றில் வசித்துவந்த தவராசா கவிதாவின் குடும்பத்தினருக்கு தியாகி அறக்கொடை நிறுவன இயக்குனரின் 15 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனவிரத்னவினால் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தியாகி அறக்கொடை நிதிய இயக்குனர் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் இந்த வீடு இரண்டு மாதங்களும் 9 நாட்களுக்குள் இராணுவத்தினரால் மிக வேகமாக கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment