நீர்வேலியில் இளம் யுவதி கடத்தல்!! -வெள்ளை வானில் வந்த கடத்தல் கும்பல்- - Yarl Thinakkural

நீர்வேலியில் இளம் யுவதி கடத்தல்!! -வெள்ளை வானில் வந்த கடத்தல் கும்பல்-

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த இச் சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருவது:- 

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post