நீர்வேலியில் கடத்தப்பட்ட யுவதி!! -மல்லாகத்தில் காதலனுடன் கைது- - Yarl Thinakkural

நீர்வேலியில் கடத்தப்பட்ட யுவதி!! -மல்லாகத்தில் காதலனுடன் கைது-

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வெள்ளைவானில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று செவ்வாய்கிழமை மாலை மல்லாகத்தில் வைத்து காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு வேறு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வேனில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உட்படுத்தப்படும் அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post