யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானையில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பெண்
விரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்சி (Gayathri Dilrukshi) (வயது 32) என்ற பெண் விரிவுரையாளரே இதன் போது மரணடைந்தவர் ஆவார்.
யுhனையின் தாக்குதலுக்கு உள்ளான அவர் ஆரம்பத்தில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அறுவைச் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
Post a Comment