நாடு முழுவதும் திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பினை சீர் செய்வதற்கான முழுவீச்சில் எடுக்கப்பட்டுள்ள பணிகளின் ஊடாக 75 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7 மணிவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளின் ஊடாகவே நாட்டின் 75 வீதமான பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு திரும்பவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏனைய 25 சதவீத பணிகள் சில மணித்தியாலங்களில் சீர்செய்யப்பட்டு நாடுமுழுவதும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரவலபிட்டி மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காராணமாக நாடுமுழுவதும் இன்று நண்பகல் 12.35 மணி தொடக்கம் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
Post a Comment