நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
ஜக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,995ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 134 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,849 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நாட்டில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment