நல்லூர் கோவில் தேர்த்திருவிழாவின் போது பெண்களின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 6 தங்க சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment