யாழில் வாக்களிப்பு அமோகம்!! -67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்தனர்- - Yarl Thinakkural

யாழில் வாக்களிப்பு அமோகம்!! -67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்தனர்-

பாராளுமன்ற பொது தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்துள்ளனர் என்று யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் உத்தியோக பூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியில் சற்று முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

ஊர்காவற்றுறை தொகுதியில் 16,944 பேரும், வட்டுக்கோட்டை தொகுதியில் 34,207 பேரும், காங்கேசன்துறை தொகுதியில் 29,953 பேரும், மானிப்பாய் தொகுதியில் 38,969 பேரும், கோப்பாய் தொகுதியில் 38,934 பேரும், உடுப்பிட்டி தொகுதியில் 25,350 பேரும், பருத்தித்துறை தொகுதியில் 25,865 பேரும், சாவகச்சேரி தொகுதியில் 35,005 பேரும், நல்லூர் தொகுதியில் 33,548 பேரும், யாழ் தொகுதியில் 25,166 பேரும் வாக்களித்துள்ளனர். 

இதுதவிர தபால் மூல வாக்களிப்பில் 20 ஆயிரத்து 829 பேரும் வாக்களித்திருந்தனர். இதன்படி மொத்தமாக 67.72 வீதமான 344,770 பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.

Post a Comment

Previous Post Next Post