ராஜபக்ச குடும்பத்திடம் 6 அமைச்சுக்கள்!! - Yarl Thinakkural

ராஜபக்ச குடும்பத்திடம் 6 அமைச்சுக்கள்!!

இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபபக்ச முன்னிலையில் 28 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் சத்திரியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இதில் புதிய அமைச்சரவை அமைச்சுக்கள் நான்கினையும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் படி பிரதமர் மஹிந்த ராஜபக்ச மூன்று அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்றார்.

அத்துடன் குறித்த அமைச்சர்களிடையே பிரிக்கப் பட்டுள்ள பிரிவு பின்வருமாறு.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அமைச்சும், மஹிந்த ராஜபக்சவுக்கு நிதி, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் மற்றும் வீடமைப்பு அமைச்சும்வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் சமல் ராஜபக்சவுக்கு நீர்ப்பாசன அமைச்சும், நாமல் ராஜபக்சவுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் சமல் ராஜபக்சவுக்கு உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. 

சசீந்திர ராஜபக்சவுக்கு நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங் காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத் தொழில் அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post