ஆட்டோ - பஸ் மோதி கோர விபத்து!! -5வயது குழந்தை பலி- - Yarl Thinakkural

ஆட்டோ - பஸ் மோதி கோர விபத்து!! -5வயது குழந்தை பலி-

கட்டுபொத, கல்வெவ பகுதியில் இன்று சனிக்கிழமை நண்பகல் நடந்த முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 5 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கட்டுபொத நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டிக்கு குறுக்கே நாய் ஒன்று வீதியில் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி எதிரில் வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post