யாழ்.மாவட்டத்தில் உள்ள 9 தொதிகளிலும் கடந்த 2 மணிவரைக்கும் பதிவு செய்யப்பட்ட வாக்களிப்பு விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 மணிவரைக்கு 2 இலட்சத்தி 44 ஆயிரத்து 581 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 53.36 வீத வாக்கு பதிவாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை தொகுதியில் 14 ஆயிரம் பேரும், வட்டுக்கோட்டை தொகுதியில் 26 ஆயிரத்த 792 பேரும், காங்கேசன்துறை தொகுதியில் 23 ஆயிரத்த 663 பேரும், மானிப்பாய் தொகுதியில் 31,743 பேரும், கோப்பாய் தொகுதியில் 30,861 பேரும், உடுப்பிட்டி தொகுதியில் 19,286 பேரும், பருத்தித்துறை தொகுதியில் 20,919 பேரும், சாவகச்சேரி தொகுதியில் 28,380 பேரும், நல்லூர் தொகுதியில் 28,145 பேரும், யாழ் தொகுதியில் 20,785 பேரும் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
Post a Comment