புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி 9.30 மணிக்குக் கூடும் என்று அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதிதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்கள்.
தொடர்ந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று வெளியான வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment