மீண்டும் மின்சாரம் துண்டிக்க வாய்ப்பு!! -3 நாட்கள் தேவை என்கிறது நுரைச்சோலை- - Yarl Thinakkural

மீண்டும் மின்சாரம் துண்டிக்க வாய்ப்பு!! -3 நாட்கள் தேவை என்கிறது நுரைச்சோலை-

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வெப்ப மின் நிலையம் இடிந்து விழுந்துள்ளது என தெரிவித்துள்ள மின்சார சபை இதனாலேயே மின் தடை ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, தேசிய கட்டமைப்புக்கு வழங்கப்படும் 800 மெகா வாட்டிற்கும் அதிகமான திறனை இழந்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்து விட்டதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நிலைமையை முழுமையாக சீர் செய்ய மூன்று நாட்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post