யாழில் 3 பேருக்கு கொரோனா!! -பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதி- - Yarl Thinakkural

யாழில் 3 பேருக்கு கொரோனா!! -பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதி-

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

முழங்காவிலில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை 120 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

குறிப்பாக போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2 பேர், வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்ற 14 பேர், முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் 98 பேர், வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 3 பேர் உள்ளிட்ட 120 பேருக்கே பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

Post a Comment

Previous Post Next Post