வல்வை படுகொலையின் 31 ஆவது நினைவேந்தல்!! - Yarl Thinakkural

வல்வை படுகொலையின் 31 ஆவது நினைவேந்தல்!!

யாழ்.வல்வைப் படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் ஆமு.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இன்று மாலை 7 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1989 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுவும் இணைந்து சுட்டுப் படுகொலை செய்தனர். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் பின், ஊருக்குள் சென்று அப்பாவிப் பொது மக்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post