மாணவனுக்கு கொரோனா!! -ஆசிரியர்கள் உள்ளிட்ட 30 பேர் தனிமைப்படுத்தலில்- - Yarl Thinakkural

மாணவனுக்கு கொரோனா!! -ஆசிரியர்கள் உள்ளிட்ட 30 பேர் தனிமைப்படுத்தலில்-

பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பினை பேணிய 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கே முதலாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கல்விகற்ற பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்மாணவன் இராஜாங்கனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகின்றார் என்பகு குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post