மணி குறித்து 2 நாட்களுக்குள் முடிவு!! -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- - Yarl Thinakkural

மணி குறித்து 2 நாட்களுக்குள் முடிவு!! -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-


மணிவண்ணன் தொடர்பில் இரு நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

கட்சியின் அஸ்திவாரத்தில் கை வைக்கும் யாரும் எம்முடன் இணைந்திருக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

கொழும்பில் உள்ள தனியார் வானொலிக்கு இன்று வழங்கிய நேர்காணலில் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும தெரிவிக்கையில்:- 

மத்தியகுழுவின் தீர்மானத்தின்படி மணிவண்ணன் வகித்த பதவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக அவருக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளோம். அந்த அறிவிப்பு தொடர்பான பதில் ஒன்றினையும் மணிவண்ணன் எமக்கு அனுப்பிவைத்துள்ளார். 

இது தொடர்பில் நேற்று ஆராய்வுகளை நடத்தியிருந்தோம். அதில் சிறு தடைகள் ஏற்பட்டதால் முழுமையாக ஆராய முடியவில்லை. இன்று அல்லது நாளை அது தொடர்பில் மீண்டும் ஆராய்வோம். 

முடிவினையும் எடுப்போம். இதை தாண்டி நான் தற்போது எதனையும் சொல்ல விரும்பவில்லை. 

எமது கட்சியின் கொள்கை தொடர்பில் குழப்பங்களை ஏற்படுத்த பல தரப்புகள் முனைகின்றார்கள். கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் இவ்வாறானவர்கள் செயற்படுகின்றார்கள். 
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை புற்கணிப்பது என்பது எமது கட்சியின் கொள்ளையாகும். அதற்கு எதிராக செயற்படுபவர்கள் கட்சிக்குள் இருக்க முடியாது. 

மற்றையது தமிழ் தேசம் என்ற அங்கிகாரத்தை வலியுறுத்த தேவையில்லை என்பவர்களும் எமது கட்சியில் இருக்க தேவையில்லை. 

புகோள அரசியலை கொண்டு எமது அரசியல் இலக்குகளை அடைய முற்படுவது என்பது எமது கட்சியின் அடிப்படை அஸ்திவாரமாக உள்ளது. எமது அஸ்திவாரத்தில் யாரும் கைவைத்தால் எமது அமைப்பில் இருக்க முடியாது. 

அவ்வாறு செயற்படுபவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் அணி, அங்கஜன் அணி, ஈ.பி.டி.பி போன்றவர்களுடன் தாராளமாக பேய் சேரலாம் என்றார். 

Post a Comment

Previous Post Next Post